An Online Tamil Movie Entertainment Portal

 
 


 
Don't Miss
 

 

விக்ரம் வேதா விமர்சனம்

 

 
Quick Stats
 

Plot
87%


 
Acting
81%


 
Directing
78%


 
Cinematography
80%


 
Costume
71%


 
Score
81%


 
Total Score
80%
80/ 100


User Rating
no ratings yet

 


What We Thought

புஷ்கர் காயத்ரியின் ஓரம் போ, வ குவாட்டர் கட்டிங் பார்த்தவர்கள் அச்சம் ஒருபக்கம் ஆர்வம் ஒருபக்கம் என்று கலவையாகத்தான் விக்ரம் வேதாவுக்கு சென்றிருப்பார்கள். புஷ்கர் காயத்ரியின் ட்ரீட்மெண்ட் அப்படி. உணர்வை செருப்புக்கு கீழே நசுக்கி ஐடியாவை தலைக்கு மேலே வைத்திருப்பார்கள். விக்ரம் வேதா இரண்டும் நடுவே. 16 கொலைகள் செய்திருக்கும் கேங்ஸ்டர் வேதாவையும் அவன் கூட்டாளியையும் போட்டுத்தள்ள ஒரு போலீஸ் போர்ஸ் அமைக்கிறார்கள். அதில் நேர்மையான அதிகாரி விக்ரம். கோட்டுக்கு இந்தப் பக்கம் நான் நல்லவன், அந்தப் […]

Posted July 22, 2017 by

 
Full Article
 
 

புஷ்கர் காயத்ரியின் ஓரம் போ, வ குவாட்டர் கட்டிங் பார்த்தவர்கள் அச்சம் ஒருபக்கம் ஆர்வம் ஒருபக்கம் என்று கலவையாகத்தான் விக்ரம் வேதாவுக்கு சென்றிருப்பார்கள். புஷ்கர் காயத்ரியின் ட்ரீட்மெண்ட் அப்படி. உணர்வை செருப்புக்கு கீழே நசுக்கி ஐடியாவை தலைக்கு மேலே வைத்திருப்பார்கள். விக்ரம் வேதா இரண்டும் நடுவே.

16 கொலைகள் செய்திருக்கும் கேங்ஸ்டர் வேதாவையும் அவன் கூட்டாளியையும் போட்டுத்தள்ள ஒரு போலீஸ் போர்ஸ் அமைக்கிறார்கள். அதில் நேர்மையான அதிகாரி விக்ரம். கோட்டுக்கு இந்தப் பக்கம் நான் நல்லவன், அந்தப் பக்கம் கிரிமினல் கெட்டவன். கெட்டவனை நல்லவன் கொல்றதில் தப்பேயில்லை என்று சும்மா போட்டுத்தள்ளி போய்க்கொண்டிருக்கும் கேரக்டர். பிறகு கோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கிறவனும் அவ்வளவு கெட்டவனில்லை என்று புரிகிறது. கோட்டுக்கு இந்தப் பக்கம் நிற்கிறவனும் அவ்வளவு நல்லவனில்லை என்றும் தெரிகிறது. கோடு என்று ஒன்றேயில்லை, எல்லோரும் ஒரு வட்டத்துக்குள்தான் இருக்கிறேnம் என்ற பேருண்மையும் புரிகிறது. சரி, இதில் வேதாவின் பங்கு? இந்த உண்மைகளை விக்ரம் தோளில் வேதாளமாக தொங்கிக் கொண்டு புரிய வைப்பதே வேதாதான்.

விக்ரம் ஒவ்வொருமுறை பிடிக்கும் போதும் ஒரு கதை சொல்லி தப்பிக்கிறார் வேதா. அந்த கதைக்குப் பின்னால் செல்லும் விக்ரம் உண்மையை கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொள்ளும்வகையில் அமைத்திருக்கும் திரைக்கதைதான் விக்ரம் வேதாவின் உயிர்நாடி. விக்ரமாக மாதவன், வேதாவாக விஜய் சேதுபதி. மாதவனுக்கு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று லிமிடெட் ஏரியா. விஜய் சேதுபதிக்கு அன்லிமிடெட். உச்சரிப்பு, மேனரிஸம், உடல்மொழி என்று சகலத்திலும் நையாண்டி. அவர் வரும் காட்சியில் ஒன்று கைத்தட்டுகிறார்கள் இல்லை குலுங்கி சிரிக்கிறார்கள்.

புஷ்கர் காயத்ரியின் படங்களில் வரும் பெண் கதாபாத்திரங்கள் வழக்கமான அம்மாஞ்சியிலிருந்து மாறுபட்டவர்கள். கதிரின் காதலியாக வரும் வரலட்சுமிக்கு கதிரைவிட இரண்டு மூன்று வயது அதிகம். மாதவனின் மனைவியாக வரும் ஷ்ரதா ஸ்ரீநாத் இயல்பாக விஸ்கி குடிக்கிறார், வெட்கப்படாமல் திருமணத்துக்கு முன் கூடுகிறார். இந்திய கலாச்சார மாயையில் இவ்விரு பெண்களும் போகிற போக்கில் தண்ணி தெளிக்கிறார்கள்.

மணிகண்டனின் வசனம், வினோத்தின் ஒளிப்பதிவு, சாமின் இசை என்ற முக்கூட்டணி இரண்டரை மணிநேர என்டர்டெயின்மெண்டுக்கு உத்தரவாதமளிக்கிறது. முக்கியமாக விஜய் சேதுபதியின் ‘பில்டப்’ காட்சிகளில் இசையின் பங்கு அதிகம்.

காட்சி சுவாரஸியத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால் எல்லா கமர்ஷியல் படங்களிலும் உள்ள கிளிஷேக்கள் இதிலும் உண்டு. படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் யாருக்கும் அப்பா அம்மா இல்லை. விக்ரம், வேதாவை விடுவோம். வரலட்சுமி கதாபாத்திரத்துக்குமா? சுற்றியிருப்பவர்களின் சூதுவாது கொஞ்சம் கூட விக்ரமுக்கு தெரியாமலிருப்பது இன்னொரு ஓட்டை. கிளைமாக்ஸில் ஆளாளுக்கு துப்பாக்கியை வைத்து தீபாவளி போல் இஷ்டத்துக்கு வெடிக்க, சேது கதாபாத்திரம் அந்த சீரியஸ் நேரத்திலும் காமெடி பண்ண, கச்சிதமாக வைக்க வேண்டிய முற்றுப்புள்ளி காமாசோமாவாகிறது.

திரைக்கதைக்கு (சின்னச் சின்ன ஓட்டைகள் இருந்தாலும்) கொடுத்திருக்கும் முக்கியத்துவமும், மாதவன், விஜய் சேதுபதியின் நடிப்பும் விக்ரம் வேதாவை கவனிக்க வைக்கிறது.

விக்ரம் வேதா… என்டர்டெயின்மெண்டுக்கு உத்தரவாதம்.


http://s10.histats.com/js15.js%27 s10.histats.com