Posted January 26, 2019 by editor in Reviews
 
 

சார்லி சாப்ளின் 2 விமர்சனம்

படம்:- சார்லி சாப்ளின் 2
இயக்குனர்:- ஷக்தி சிதம்பரம்
நடிகர்கள் : – பிரபு தேவா, நிக்கி கல்ராணி, பிரபு, அதா ஷர்மா, அமித் பார்கவ்
தயாரிப்பு: – அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம்
இசையமைப்பளார் :- அம்ரீஷ் கணேஷ்

சார்லி சாப்லின் 2 படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது .படத்தில் பிரபுதேவா நிக்கி கல்ராணி ஆதா ஷர்மா மற்றும் பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் ஹீரோ திருமண தகவல் மையம் ஒன்றை நடத்தி வருகிறார். ஆனால் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதுதான். ஒரு கட்டத்தில் நடிகர் பிரபுவின் மகள் நிக்கி கல்ராணியை சந்தித்து காதலில் விழுகிறார் பிரபுதேவா. நன்றாக சென்று கொண்டிருக்கும் காதலில் திடீரென இடையில் அதா சர்மா வந்து நுழைகிறார்.

இதனால் நிக்கி கல்ராணிக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டு விடுகிறது அடிக்கடி இந்த சந்தேகம் தொடர இருவரும் சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுக்கின்றனர். பிரபுதேவா மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் சென்று திருப்பதியில் திருமணம் செய்கின்றனர். இதற்காக பிரபுதேவா குடும்பமும் நிக்கி கல்ராணி குடும்பமும் திருப்பதிக்கு செல்லும் போது நடக்கும் கலகலப்பான காமெடி தான் படத்தின் மொத்த கதையும்.

கமர்சியல் படம் என்பதால் பெரிதாக படத்தை பார்க்க மெனக்கெடத் தேவையில்லை. உட்கார்ந்து பார்த்தால் போதும் அளவிற்கு இருக்கிறது. குடும்பமாக சென்று நல்ல படத்தை பார்த்து சிரித்து விட்டு வர வேண்டும் என்பவர்களுக்கு இப்படம் சிறந்த பொழுதுபோக்கு.

பிரபுதேவாவின் நடிப்பும், நடனமும் அம்ரீஷ் கணேஷ் இசையும் நன்றாக இருக்கிறது.

Rating 3.25/5.00