Posted January 22, 2019 by editor in News
 
 

AGS – தளபதி விஜய் – அட்லி – A.R.ரஹ்மான் இணையும் தளபதி 63

AGS எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தளபதி விஜய் அவர்களுடன் அடுத்த திரைப்படத்தில் கைகோர்க்க உள்ளது என்பதை தங்களுக்கு அதிகாரபூர்வமாக தெரிவிப்பதில் பெருமை கொள்கிறோம்.

இது எங்களின் நீண்ட நாள் கனவு. தளபதி விஜயுடன் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சியும் அளிவில்லாத உற்சாகமும் அடைகிறோம். இது எங்களது தயாரிப்பில் உருவாகும் 20வது திரைப்படம், மேலும் எங்கள் நிறுவனம் இதுவரை தயாரித்ததில் இதுவே பிரம்மாண்டமான படைப்பாகும்.

தளபதி 63 – இந்த திரைப்படத்தின் இயக்குனர் அட்லி, தயாரிப்பாளர்கள் கல்பாத்தி S.அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ். தெறி, மெர்சல் திரைப்படங்களை தொடர்ந்து தளபதி விஜயும் வெற்றி இயக்குனர் அட்லியும் இணையும் ஹாட்ரிக் வெற்றி திரைப்படம் இது.

இந்த வெற்றி கூட்டணிக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் இசைப்புயல் A.R.ரஹ்மான் அவர்கள் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். மெர்சல், சர்கார் சூப்பர் ஹிட் ஆல்பங்களை தொடர்ந்து தளபதி விஜயும் இசைபுயலும் மீண்டும் தளபதி 63ல் இணைகிறார்கள்.

தளபதி விஜய் – வெற்றி இயக்குனர் அட்லி – இசை புயல் A.R.ரஹ்மான் வெற்றி கூட்டணியின் இரண்டாவது திரைப்படம் இதுவாகும். இந்த மெர்சல் கூட்டணியுடன் இணைவதில் AGS எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது.

ஏராளமான முன்னனி நடிகர் நடிகைகள், இந்தியாவின் தலை சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் தளபதி 63 அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் மாபெரும் பொழுது போக்கு திரைப்படமாக இருக்கும்.

உலகின் சிறந்த திறமையாளர்களால் உருவாக்கப்படும் தளபதி 63 இது வரை வெளிவந்த தளபதி விஜயின் திரைப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று.

ஓளிப்பதிவு – G.K.விஷ்ணு
படத்தொகுப்பு – ரூபன்.L, ஆண்டனி
கலை -T.முத்துராஜ்
சண்டைப்பயிற்சி – அனல் அரசு
பாடல்கள் – விவேக்
நிர்வாக தயாரிப்பு – S.M.வெங்கட் மாணிக்கம்,
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி

ஏனைய நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்

இந்த முக்கியமான தருணத்தில் தளபது 63 திரைப்படத்திற்கு தங்களின் நல் வாழ்த்துக்களையும் ஆதரவையும் வேண்டுகிறோம்